Main Menu

2025 ஆம் ஆண்டில் 9 சிறுவர் திருமணங்கள், 79 பதின்ம வயது கர்ப்பங்கள் பதிவு

2025 ஆம் ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக மொத்தம் 10,455 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் (NCPA) பதிவு செய்யப்பட்டுள்ளன.

பதிவான முறைப்பாடுகளில் 545 பாலியல் துன்புறுத்தல் தொடர்பானவை, 231 கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பானவை.

இதேவேளை, கடந்த ஆண்டு 79 பதின்ம வயது கர்ப்பங்கள் மற்றும் மூன்று கருக்கலைப்புகளையும் அதிகார சபை பதிவு செய்துள்ளது.

2025 ஆம் ஆண்டில் ஒன்பது சிறுவர் திருமணங்கள், 38 பாலியல் வன்கொடுமை வழக்குகள், சிறுவர்களை குறிவைத்து 150 சைபர் துஷ்பிரயோக சம்பவங்கள் மற்றும் 20 சிறுவர் தற்கொலை முயற்சிகள் பதிவாகியுள்ளதாகவும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்கள் தொடர்பாக 42 முறைப்பாடுகளும், பெற்றோர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பின்தங்கியதாக ஒன்பது முறைப்பாடுகளும் பெறப்பட்டுள்ளன.

இந்த புள்ளிவிவரங்கள் இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்த தொடர்ச்சியான கவலைகளை எடுத்துக்காட்டுகின்றன.

இது தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் தலையீட்டின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.