Main Menu

கர்நாடக முதலமைச்சருடன் நாமல் எம்.பி சந்திப்பு

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

பெங்களூருவில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும், இந்த சந்திப்பை இட்டு மகிழ்ச்சியடைவதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் இடுத்துள்ள பதிவொன்றில் நாமல் ராஜபக்ச இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்தியாவின் மிக மூத்த மற்றும் மரியாதைக்குரிய தலைவர்களில் ஒருவரான சித்தராமையாவை சந்திக்க முடிந்தது மரியாதைக்குரியதாகும்.

இந்தியா-இலங்கை இருதரப்பு உறவுகள், கர்நாடகாவின் வளர்ச்சி மற்றும் சமூக நல முயற்சிகள் குறித்து இதன் போது விவாதித்தோம்.

மேலும் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம், இலங்கைக்கு வழிகாட்டக்கூடிய சிறந்த நடைமுறைகள் பற்றிய நுண்ணறிவுகளைப் பரிமாறிக் கொண்டோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.