Main Menu

8 கோடி பெறுமதியான குஷ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

பெருமளவிலான குஷ் போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்தி வந்து, அதனை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் 25.01.2026 அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 37 வயதுடையவர் என்றும், அவர் இரவு விடுதி ஒன்றில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணிபுரிபவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் இன்று அதிகாலை ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளார்.

அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளில், 8 பார்சல்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 கிலோகிராம் 220 கிராம் குஷ் போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சுமார் 8 கோடியே 22 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட விமானப் பயணியையும் போதைப்பொருளையும் மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.