சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட காபெக்ஸ் தமிழ் மகா வித்தியாலயம் , டங்கல் தமிழ் வித்தியாலயம், ஒஸ்போன் தமிழ் வித்தியாலயம், வனராஜா தமிழ் வித்தியாலயம், வனராஜா மேல் பிரிவு தமிழ் வித்தியாலயம், கிளவட்டன் தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலையை சேர்ந்த 500மாணவர்களுக்கு சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன
இந்த நிகழ்வானது இலங்கை கமினியூஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டது
நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான சீன தூதுவர் சீ.ஷென்ங்ஹொங் மற்றும் கமினியூஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கலாநிதி வீரசிங்க., தூதுவர் காரியாலய அதிகாரிகள் கட்சியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
