Main Menu

இங்கிலாந்தில் இனி தாய் மகப்பேறு விடுப்பு போல தந்தைகளும் விடுப்பு எடுக்கும் நடைமுறை அறிமுகம்

இங்கிலாந்து அரசாங்கம் கொண்டுவந்துள்ள புதிய வேலைவாய்ப்பு உரிமைகள் சட்டத்தின் கீழ், ஏப்ரல் மாதம் முதல், பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே பெற்றோர் விடுப்பு பெறும் உரிமை நடைமுறைக்கு வருகிறது.

ஒரு தாய் மகப்பேறு விடுப்புடன் இருப்பது போல, கூடுதலாக 32,000 அப்பாக்கள் உடனடியாக தந்தைவழி விடுப்பைப் பெற முடியும் என்று இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த மாற்றத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான தந்தையர் மற்றும் சுமார் 1.5 மில்லியன் பெற்றோர்கள் கூடுதல் நெகிழ்வுத்தன்மையுடனும் பாதுகாப்புடனும் தங்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்ள முடியும்.

குறிப்பாக, துணையை இழந்த தந்தையர்களுக்கு 52 வாரங்கள் வரை விடுப்பு வழங்கும் சிறப்பு விதிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதேவேளை, உழைக்கும் வர்க்கத்திற்குத் தேவையான அடிப்படை உரிமைகளை இது வழங்கும் என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இதனை வரவேற்றுள்ளார்.

இருப்பினும், இந்தச் சட்டம் சிறு தொழில்களைப் பாதிக்கும் என்றும், வேலைவாய்ப்புகளை அழிக்கும் அபாயம் கொண்டிருப்பதாகவும் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

பகிரவும்...