அமெரிக்காவை கண்டிக்கும் வடகொரியா
வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டதை “இறையாண்மை மீதான கடுமையான அத்துமீறல்” என்று வடகொரியா கண்டித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து வடகொரிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “வெனிசுவேலாவில் அமெரிக்கா முன்னெடுத்துள்ள இந்த மேலாதிக்க நடவடிக்கையை வடகொரியா வன்மையாகக் கண்டிக்கிறது” என்று தெரிவித்தார்.
“அமெரிக்காவின் முரட்டுத்தனமான மற்றும் கொடூரமான தன்மையை மீண்டும் ஒருமுறை இந்தச் சம்பவம் தெளிவாக உறுதிப்படுத்துகிறது” என்றும் அவர் மேலும் கூறினார்.
மதுரோ பதவியிலிருந்து அகற்றப்பட்டதை “ஐ.நா சாசனம் மற்றும் இறையாண்மை, தலையிடாமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றைப் போற்றும் சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறும் செயல்” என்று வடகொரியா விபரித்துள்ளது.
மேலும், மற்ற நாடுகளின் இறையாண்மையை அமெரிக்கா வழக்கமாக மீறுவதற்கு எதிராக “முறையான எதிர்ப்பு மற்றும் கண்டனக் குரல்களை” எழுப்புமாறும் அது கேட்டுக்கொண்டுள்ளது.
பகிரவும்...
