Main Menu

யாழில் சத்திய பிரமாணத்துடன் அரசகரும பணிகள் ஆரம்பம்

2026ஆம் ஆண்டின் முதல் நாள் அரசகரும பணிகள் இன்றைய தினம் (1) சத்திய பிரமாணத்துடன் ஆரம்பமானது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் காலை மங்கள விளக்கு ஏற்றலை தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றப்பட்டு சத்யபிரமாணம் செய்துகொள்ளப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற பதிவாளர் பாலசிங்கம் சரண்ராஜ் தலைமையில் நிகழ்வுகள் இடம் பெற்றன.

இன்றைய நாள் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணத்தில் முன்னர் மாவட்ட நீதிபதியாக கடமையாற்றிய ஜெகநாதன் கயநிதி பாலன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

அவர் தற்பொழுது மேல் நீதிமன்ற நீதிபதியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமை ஆற்றி வருகின்றார்.

வடமாகாண குடியியல் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி விநாயகமூர்த்தி ராமக்கண்ணன் நேரடி பங்களிப்புடன் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி பெருமாள் சிவகுமார், நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின் குமார், சிறுவர் நீதிமன்ற நீதவான் நிரஞ்சனி முரளிதரன், வடமாகாண தொழில் நியாய சபை தலைவர் தாரணி கணேசமூர்த்தி, உட்பட நீதிமன்ற பணியாளர்கள் உத்தியோகத்தர்கள் பொலிஸார் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற பதிவாளர் சரண்ராஜ் பதவிப்பிரமாணங்களை வாசிக்க உத்தியோகத்தர்கள் அதனை தொடர்ந்து சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...