2026 உலக சுற்றுலா தரவரிசை: இலங்கை விடுபட்டது?
ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள் தங்களின் சிறந்த பயணங்களைத் திட்டமிட உதவும் வகையில், சர்வதேச அங்கீகாரம் பெற்ற பயண நிறுவனங்கள் ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில், லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் பிரபல சுற்றுலா நிறுவனமான ‘The Rough Guide’, 2026 ஆம் ஆண்டு பயணம் செய்ய வேண்டிய 26 சிறந்த இடங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
சுமார் 30,000 க்கும் மேற்பட்ட பயண விசாரணைகளை ஆழமாக ஆய்வு செய்த பின்னரே இந்தப் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் எங்கு செல்ல விரும்புகிறார்கள், எத்தகைய அனுபவங்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இந்த சர்வதேசப் பட்டியலில் இந்தியாவின் கேரளா 16 ஆவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
பசுமையான தேயிலைத் தோட்டங்கள், விருந்தோம்பல் பண்பு ஆகியவற்றால் கவரப்பட்ட சுற்றுலாப் பயணிகள், 2026-ஆம் ஆண்டில் அதிகம் விரும்பும் இடங்களில் ஒன்றாக கேரளாவைத் தேர்வு செய்துள்ளனர்.
இதனிடையே, கடந்த மாதம் ‘Travel + Leisure’ என்ற சர்வதேசப் புகழ்பெற்ற பயண சஞ்சிகை வெளியிட்ட பட்டியலில் இலங்கை இடம்பிடித்திருந்தது.
இருப்பினும், தற்போது வெளியாகியுள்ள இந்த புதிய பட்டியலில் இலங்கை இடம்பெறவில்லை.
கடந்த மாத இறுதியில் இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா’ பேரழிவின் தாக்கம் மற்றும் அதன் பின்னரான சூழல் காரணமாகவே இலங்கை இந்தப் பட்டியலில் விடுபட்டிருக்கலாம் என ஊகிக்க முடிகிறது.
இது குறித்து அந்த நிறுவனம் அதிகாரபூர்வ விளக்கங்கள் எதனையும் அளிக்கவில்லை என்றாலும், உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களின் இத்தகைய ஆய்வுகளில் பாதுகாப்பு மற்றும் பேரிடர் பாதிப்புகள் முக்கிய காரணியாக அமைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
‘The Rough Guide’, வெளியிட்ட 2026 இல் பயணம் செய்ய சிறந்த இடங்கள் பின்வருமாறு
01. மாரகேச், மொரோக்கோ (Marrakech, Morocco)
02. கிரீட், கிரீஸ் (Crete, Greece)
03. பாலி, இந்தோனேசியா (Bali, Indonesia)
04. டோக்கியோ, ஜப்பான் (Tokyo, Japan)
05. ரோம், இத்தாலி (Rome, Italy)
06. இஸ்தான்புல், துருக்கி (Istanbul, Turkey)
07. சிசிலி, இத்தாலி (Sicily, Italy)
08. லிஸ்பன், போர்த்துக்கல் (Lisbon, Portugal)
09. ஹனோய், வியட்நாம் (Hanoi, Vietnam)
10. பேங்கொக், தாய்லாந்து (Bangkok, Thailand)
11. பரிஸ், பிரான்ஸ் (Paris, France)
12. டெனெரிஃப், ஸ்பெயின் (Tenerife, Spain)
13. அமல்ஃபி கடற்கரை, இத்தாலி (Amalfi Coast, Italy)
14. ரியோ டி ஜெனிரோ, பிரேசில் (Rio de Janeiro, Brazil)
15. புடாபெஸ்ட், ஹங்கேரி (Budapest, Hungary)
16. கேரளா, இந்தியா (Kerala, India)
17. டால்மேஷியன் கடற்கரை & டுப்ரோவ்னிக், குரோஷியா (Dalmatian Coast & Dubrovnik, Croatia)
18. குர்கர் தேசிய பூங்கா, தென்னாபிரிக்கா
19. யுகடன், மெக்சிகோ (Yucatán, Mexico)
20. செவில்லே, ஸ்பெயின் (Seville, Spain)
21. நமீபியா (Namibia)
22. ஹைலேண்ட்ஸ், ஸ்கொட்லாந்து (The Highlands, Scotland)
23. புரோவென்ஸ், பிரான்ஸ் (Provence, France)
24. பான்டனல், பிரேசில் (Pantanal, Brazil)
25. சியாங் மாய், தாய்லாந்து (Chiang Mai, Thailand)
26. பலவான், பிலிப்பைன்ஸ் (Palawan, Philippines)
பகிரவும்...
