Main Menu

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று நாட்டிற்கு வருகை

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.

அவர்  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரிடர் மீட்பு மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக  ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட செய்தியை, வெளிவிவகார அமைச்சர் , ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும்...