Main Menu

2025-ல் உலகின் தேடல் எது? கூகுள் வெளியிட்ட பட்டியல்

2025 ஆம் ஆண்டில் உலக மக்கள் எவற்றை அதிகம் தேடினார்கள் என்பதை வெளிப்படுத்தும் “Year in Search 2025” அறிக்கையை கூகுள் வெளியிட்டுள்ளது.
அதன்படி செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் கூகுளின் Gemini முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
அதேவேளையில், புதிய போட்டியாளராக உருவெடுத்த DeepSeek 6ஆவது இடத்தைப் பிடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் Apple ரசிகர்களின் எதிர்பார்ப்பான iPhone 17 தேடல்களில் 9ஆவது இடத்தை வகிக்கின்றது.
இதேபோன்று கிரிக்கெட் மற்றும் கால்பந்து உலகிற்கு இவ்வாண்டு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது.
இந்தியா vs இங்கிலாந்து மற்றும் இந்தியா vs அவுஸ்திரேலியா மோதல்கள் முறையே 2 மற்றும் 5-வது இடங்களைப் பிடித்தன.
கால்பந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் FIFA Club World Cup 4ஆவது இடத்தைப் பிடித்தது.
ஆசிய பிராந்தியத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஆசியக் கிண்ணம் (Asia Cup) 7ஆவது இடத்தில் உள்ளது.
அத்துடன் அமெரிக்க அரசியல் விமர்சகர் சார்லி கிர்க் (Charlie Kirk) 3-வது இடத்தைப் பிடித்துத் தேடல்களில் ஆதிக்கம் செலுத்தினார்.
சர்வதேச ரீதியாக ஈரான் நாட்டின் புவிசார் அரசியல் மாற்றங்கள் (8-வது இடம்) மற்றும் எப்போதும் பரபரப்பை ஏற்படுத்தும் இந்தியா – பாகிஸ்தான் உறவுகள் (10-வது இடம்) ஆகியவை உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன.
பகிரவும்...