Main Menu

‘REBUILDING SRILANKA ’ நிதியத்திற்கு மேலும் பல நிறுவனங்கள் நன்கொடை

அனர்த்தத்தில் இருந்து நாட்டை கட்டியெழுப்பும் ‘ REBUILDING SRILANKA ’ நிதியத்திற்கு மேலும் தனியார் நிறுவனங்களிடம் நன்கொடை கிடைக்கப்பெற்றுள்ளது

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக Almas Holdings நிறவனத்தினால்; 100 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நன்கொடைக்காக காசோலையை  Almas Holdings நிறுவனத்தின் தலைவர் ஜனாதிபதிஅலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார்.

 

கண்டி மாவட்டத்தில் வெள்ள நிவாரண வேலைத்திட்டங்கள் மற்றும் புனர்நிர்மாணப் பணிகளுக்கு தொடர்ந்தம் ஆதரவு வழங்க எதிர்பார்ப்பதாக குறித்த நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக Asriel Marketing நிறுவனத்தினால் 05 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டுள்ளது

குறித்த காசோலையை Asriel Marketing நிறுவனத்தின் தலைவர் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்துள்ளார்.

பகிரவும்...