இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்தக் கோரி யாழில் பாரிய பேரணி
இந்திய மீனவர்களின் சட்டவிரோத அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி யாழ்ப்பாணத்தில் நேற்று (12) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ். மாவட்ட மீனவர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த இந்தப் போராட்டம், பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அலுவலகத்திற்கு முன்னால் ஆரம்பமானது.
அங்கிருந்து மீனவர்கள் பேரணியாக யாழ். மாவட்டச் செயலகம் வரை சென்றடைந்தனர்.
இதன்போது, இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைத் தடுக்கக் கோரி யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் மீனவர்களால் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகம், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் ஆகியவற்றிலும் மீனவப் பிரதிநிதிகளால் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.
பகிரவும்...