Main Menu

பேரிடரால் பாதிக்கப்பட்ட 85,351 நபர்கள் இன்னும் தற்காலிக தங்குமிடங்களில்

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 26,841 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 85,351 நபர்கள் தற்போது தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

அவர்கள் 873 மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று DMC குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை பேரிடர் காரணமாக நாடு முழுவதும் பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கையானது 639 ஆக உயர்ந்துள்ளது.

அதேநேரம், 193 பேர் காணாமல் போயுள்ளனர்.

5,346 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன, 86,245 வீடுகள் பகுதியளவில் சேதடைந்துள்ளதாகவும் DMC இன் அண்மைய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பகிரவும்...