கிரேக்க பிணைமுறி வழக்கிலிருந்து அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட நால்வர் விடுவிப்பு
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட 4 பிரதிவாதிகள், கிரேக்க பிணைமுறி தொடர்பான வழங்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2012 ஆம் ஆண்டில், கிரேக்கத்தில் நிலவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இலங்கை அரச நிதியை கிரேக்க பிணைமுறிகளில் முதலீடு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 1.8 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்தியதாக இவர்கள் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
எனினும், இந்த பிணைமுறை பரிவர்த்தனை மத்திய வங்கியின் விதிமுறைகளுக்கும், நிதி அறிக்கை விதிமுறைகளுக்கும் அமைய சட்டப்பூர்வமாக நடந்தவொன்று என உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.
எனினும், இலஞ்ச ஒழிப்புஆணைக்குழு இது தொடர்பில் வழக்கை இரண்டாவது முறையாக தாக்கல் செய்தது நியாயமற்றது என ஜனாதிபதி சட்டத்தரணிகளான டிலான் ரத்நாயக்க மற்றும் நளின் லத்து ஹெட்டிஆரச்சி ஆகியோர் நீதிமன்றில் எழுத்துபூர்வ சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.
இதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகை மீள பெறப்பட்டமையினால், மேல் நீதிமன்றம் குறித்த பிரதிவாதிகளை குற்றமற்றவர்கள் என்று அறிவித்து விடுவித்தது.
பகிரவும்...