Main Menu

திமுக நடவடிக்கை நீதிபதிகளை அச்சுறுத்துகிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு

​தி​முக-​வினரின் நடவடிக்​கைகள் நீதிப​தி​களை அச்​சுறுத்​துவது​போல உள்​ளது என்று பாஜக மாநில முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை கூறி​னார்.

கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று முன்​தினம் இரவு கூறிய​தாவது: செங்​கோட்​டையன் அரசி​யல் பாரம்​பரி​யம் கொண்​ட​வர். அவர்​களு​டைய கட்சி குறித்து பெரு​மை​யாகப் பேசு​வார். எனவே, விஜய் குறித்த அவரது கருத்தை அப்​படித்​தான் பார்க்க வேண்​டும். வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேசிய ஜனநாயகக் கூட்​டணி வெற்றி பெறும் என்​ப​தில் உறு​தி​யாக உள்ளோம்.

திருப்​பரங்​குன்​றம் விவ​காரத்​தைப் பொறுத்​தவரை, மக்​களவை​யில் திமுக எம்​.பி.க்​கள்,நீதிபதி சுவாமி​நாதனுக்கு எதி​ராக ‘இம்​பீச்​மென்ட்’ நடவடிக்கை மேற்​கொள்ள கையெழுத்து பெற்றுள்ளனர். தீர்ப்பு சாதக​மாக கிடைக்​க​வில்லை என்​ப​தால் இவ்​வாறான நடவடிக்கை மேற்​கொள்​வது மற்ற நீதிப​தி​களை அச்​சுறுத்​து​வது போன்​றது​தான்.

திமுக அமைச்​சர்​கள், மூத்த தலை​வர்​கள் மீது ஊழல் வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. அனைத்து அரசி​யல் கட்​சித் தலை​வர்​களின் கூட்​டங்​களுக்​கும் அரசு உரிய பாது​காப்பு வழங்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

பகிரவும்...