மீட்பு முயற்சிகளுக்கு பண்டாரநாயக்க அறக்கட்டளை ரூ. 250 மில்லியன் நன்கொடை
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை, அண்மைய பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீட்பு மற்றும் மீள்குடியேற்றத்தை ஆதரிப்பதற்காக நிறுவப்பட்ட அரசாங்க நிதிக்கு 250 மில்லியன் ரூபாவினை பங்களித்துள்ளது.
இந்தப் பங்களிப்பை பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கையளித்தார்.
அண்மைய பாதகமான வானிலையால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு மீள்கட்டமைப்பு மற்றும் உதவிக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பகிரவும்...