Main Menu

பேரிடர் காரணமாக வீடுகளுக்கு ஏற்பட்ட சேதம் – மதிப்பீட்டு பணிகள் இன்று முதல் ஆரம்பம்

பேரிடர் காரணமாக வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணி இன்று (08) முதல் தொடங்கும் என்று வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தால் நிறுவப்பட்ட  குழு ஒன்றினால் இந்த மதிப்பீடுகள் நடத்தப்படுகின்றன.

நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சுத்தம் செய்வதற்கு 25,000 ரூபா முன்பணம் வழங்கப்படும் என்று அமைச்சகம் முன்னதாக அறிவித்திருந்தது.

மேலும், மீள்குடியேற்றம் மற்றும் அத்தியாவசிய வீட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு ஒரு வீட்டிற்கு 50,000 ரூபா உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்திருந்தது.

வீடுகளையோ அல்லது வாழ்வாதாரத்தையோ முற்றிலுமாக இழந்த குடும்பங்களுக்கு மூன்று மாதங்கள் வரை நிதி உதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு அல்லது அதற்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு 25,000 ரூபாவும் இரண்டுக்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு 50,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

வீடு இல்லாத குடும்பங்களுக்கு அதிகபட்சமாக ஆறு மாதங்களுக்கு 25,000 ரூபா மாதாந்திர வாடகை உதவித்தொகை வழங்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...