அலாஸ்கா-கனடா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை
அமெரிக்காவின் அலாஸ்கா-கனடா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அலாஸ்காவின் ஜூனாவில் இருந்து வடமேற்கே சுமார் 370 கிலோமீற்றர் தொலைவிலும், கனடாவின் யூகோனின் வைட்ஹார்சுக்கு மேற்கே 250 கிலோ மீற்றர் தொலைவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 07 ஆக பதிவாகியுள்ளது. 10 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலநடுக்கம் அலாஸ்காவின் யாகுடாட், ஜூனாவ் ஆகிய இடங்களில் உணரப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்பதால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர்.
எவ்வாறாயினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
சுனாமி அச்சுறுத்தல் இல்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
பகிரவும்...மேலும் படிக்க சூடானில் ஆயுத குழுக்களின் ட்ரான் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் உட்பட 50பேர் உயிரிழப்பு
