அனர்த்தங்களால் இலங்கைக்கு ஏற்பட்ட இழப்பு, 2004 சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பை விட பத்து மடங்கு அதிகம்
Ditwah’ புயலால் இலங்கைக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு, 2004 சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பை விட பத்து மடங்கு அதிகம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதன் மூலம் ஏற்படும் மொத்தச் சேதம் $2.1 ட்ரில்லியனை விட அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இறுதிச் சேத அறிக்கையைத் தயாரிக்க மேலும் இரண்டு மாதங்கள் தேவைப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதனிடையெ, புயல் உருவான நாட்களில் கடல் வெப்பநிலை 30 பாகை செல்சியஸிற்கும் அதிகமாக இருந்ததாலேயே Ditwah புயல் உருவாக காலநிலை மாற்றம் நேரடியாகக் காரணமாகியுள்ளது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பகிரவும்...