Main Menu

‘சாகர் பந்து’ நடவடிக்கையின் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர்

ஆப்ரேஷன் சாகர் பந்துவின் கீழ் தங்கள் பணியை வெற்றிகரமாக முடித்த பின்னர், இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) உறுப்பினர்கள் இன்று (05) காலை இலங்கையிலிருந்து புறப்பட்டனர்.

இலங்கை இராணுவத்துடன் ஒருங்கிணைந்து சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரிவான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இவர்கள் நாட்டிலிருந்த காலத்தில் ஆழமாக வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளைச் சென்றடைந்தனர், அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு விநியோகித்தனர், கடுமையாக வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு உதவினர்,  அவசரத் தேவை ஏற்பட்டபோது முக்கியமான ஆதரவை வழங்கியதாக இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது.

அவர்கள் நாட்டிலிருந்து புறப்படுவதற்கு முன், கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் தளபதி எயார் கொமடோர் அமித ஜெயமஹா, விமானப்படை அதிகாரிகளுடன் சேர்ந்து, இந்த பேரிடர் நிவாரண முயற்சியின் போது இலங்கைக்கு வழங்கப்பட்ட விலைமதிப்பற்ற ஆதரவிற்காக NDRF உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

May be an image of aircraft

May be an image of helicopter and text that says "AIRFORCE AIR FORCE SRILANKA"

May be an image of text that says "LG NDRE INDIA NDRI NDRF INDIA 金商活 NDNI NDRF AIR FORCE SRILANKA"

May be an image of ‎text that says "‎1350 E3B 3E KDES 12 12h0 NDI م SRILANKA AIR AIRFORCE ORCE‎"‎

பகிரவும்...