Main Menu

இலங்கைக்கான அவசர நிவாரண உதவியை வழங்கும் பிரித்தானியா

டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து இலங்கை மீள்வதற்காக பிரித்தானியாவும் அவசர நிவாரண நிதியை வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதற்கமைய 890,000 அமெரிக்க டொலர் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிதியானது செஞ்சிலுவைச் சங்கம் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான அமைப்பு மற்றும் உள்ளூர் பங்காளிகளுடன் இணைந்து அவசரப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

பகிரவும்...