வானிலை சீற்றம் – கிட்டத்தட்ட 2 இலட்சம் மக்கள் இருளில்
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் பரவலாக மின்சாரத் தடைகள் ஏற்பட்டுள்ளன.
இதன்படி கிட்டத்தட்ட 200,000 வாடிக்கையாளர்கள் தற்போது மின்சாரம் இல்லாமல் இருப்பதாக இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் நோயல் பரியந்த தெரிவித்துள்ளார்.
இதற்கமைய மின் விநியோகத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில்,தொடர்ச்சியான மோசமான வானிலை இந்த செயற்பாட்டிற்கு சவாலாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மத்திய மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான மின் தடைகள் பதிவாகியுள்ளன. இதன்படி மத்திய மாகாணத்தில் 20,000க்கும் மேற்பட்ட மின் தடைகள் பதிவாகியுள்ளன.
இந்தநிலையில் மின்சார சபை 9,000 பணியாளர்களைக் கொண்ட தொழில்நுட்பக் குழுவை பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
ஆனால் தடங்கல்களின் அளவு மற்றும் தற்போதைய நிலைமைகள் காரணமாக மின்சாரத்தை முழுமையாக மீட்டெடுக்க கணிசமான நேரம் எடுக்கும் என்றும் நோயல் பிரியந்த மேலும் கூறினார்.
பகிரவும்...
