Main Menu

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முதியோர் பராமரிப்பு இல்லம் – 11 பேர் உயிரிழப்பு

குருணாகல் மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக முதியோர் பராமரிப்பு இல்லமொன்றில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

பன்னாலை பகுதியில் அமைந்திருந்த முதியோர் பராமரிப்பு இல்லமொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது 14 பேர் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த வீட்டில் மொத்தம் 25 முதியவர்கள் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

பகிரவும்...