Main Menu

பொது அவசரகால நிலை பிரகடனம் – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

இலங்கையில் பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

அதிவிசேட வர்த்தமானி எண். 2464/30 இல் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டம் (1959 ஆம் ஆண்டின் 8 ஆம் எண்) மற்றும் அதைத் தொடர்ந்து வந்த திருத்தங்களின் கீழ் அதிகாரங்களைப் பயன்படுத்தி,  நாடு முழுவதும் அவசரகால விதிமுறைகளை செயல்படுத்த அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.

பொதுப் பாதுகாப்பையும் நாட்டின் இயல்பான செயற்பாட்டையும் உறுதி செய்வதற்கும், பொது வாழ்க்கைக்கு அவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரிக்கும் நோக்கில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பகிரவும்...