பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி மீள ஆரம்பம்
மூன்றாம் தவணையின் இறுதிக் கட்டத்திற்கான கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் டிசம்பர் மாதம் 16 திகதி ஆம் மீள ஆரம்பமாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் பேரிடர் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனை அறிவித்துள்ளார்.
இதனிடையே, உயர்தரப் பரீட்சையை காலவரையின்றி ஒத்திவைக்க கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்,
மேலும் அந்தத் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளை மீளஆரம்பிக்கும் திகதியில் மாற்றம் ஏற்பட்டால், அது தொடர்பில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகிரவும்...