Main Menu

வாகனங்களை திரும்ப பெறும் ஹூண்டாய் நிறுவனம் – கனடா வாழ் மக்களுக்கு ஓர் அறிவிப்பு

ஹூண்டாய் நிறுவனம் கனடாவில் தனது வாகனங்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.
இதன்படி, கனடாவில் 5,616 வாகனங்களை திரும்ப பெறுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாகனங்களில் எரிபொருள் கசிவு ஏற்பட்டு, தீ விபத்து அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
சில வாகனங்களில் எரிபொருள் தொட்டி பெரிதாகும் நிலை உருவாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
அறிவிப்பின்படி, ஹூண்டாய் நிறுவனம் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு கடிதம் மூலம் தகவல் வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பகிரவும்...