Main Menu

நீண்ட கால தடுப்புக் காவலுக்கு புதிய சட்டம் வருகிறது

தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர்கள் தொடர்பில் குற்றப்பத்திரங்களை சமர்பிக்கவும், நீண்ட காலம் தடுத்து வைப்பதற்குமான புதிய சட்டமூலத்தை சமர்பிக்க அரசாங்கம் தயாராகியுள்ளது.

அதன்படி புதிய சட்டமூலத்தை அடுத்த மாதம் அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த சட்டமூலம் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக அமையாது.

எனினும், நீண்டகாலமாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக , அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை வழங்கும் வகையில் புதிய சட்டமூலம் அமையவுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த சந்தேகநபர்களை நீண்டகாலம் தடுப்புக் காவலில் விசாரணை செய்யும் வகையில் புதிய சட்டமூலம் அறிமுக்கப்படுத்தப்படவுள்ளது.

பகிரவும்...