த.வெ.க தலைவர் விஜய் வழங்கிய வாக்குறுதிகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்வொன்று தற்போது நடைபெற்று வருகின்றது.
இதன்போது மக்களிடம் உரையாற்றிய தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மக்களால் அமைக்கப்படும் ஆட்சியில் அனைவருக்கும் நிரந்தர வீடு வழங்க வழிவகை செய்யப்படும் என குறிப்பிட்டார்.
அத்துடன் வீட்டிற்கு ஒரு உந்துருளி வாகனம் இருக்கும் வகையில் வழிவகை செய்யப்படும் என்றும், வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் தமிழக பாட திட்டத்தை மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
மேலும் சட்டம் ஒழுங்கை மிக சிறப்பாக வைத்து அனைவருக்குமான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் இதன்போது கூறினார்.
பகிரவும்...
