2025 வெளியானதில் அதிக வசூலை குவித்த TOP 10 படங்கள்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் த்ருவ் விக்ரம் நடித்த பைசன் திரைப்படம் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் 10 ஆம் இடத்தில் உள்ளது.
சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்த மதராஸி திரைப்படம் 9 ஆம் இடத்தை பிடித்திருக்கிறது.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்து இளைஞர்களைக் கவர்ந்த டியூட் திரைப்படம் வசூலில் 8 ஆம் இடத்தில் உள்ளது.
குடும்பங்களின் வரவேற்பைப் பெற்ற டூரிஸ்ட் பேமிலி படம் வசூலில் 7 ஆம் இடத்தில் இருக்கிறது.
நீண்ட காலமாக வெளியிடாமல் இருந்து இந்த ஆண்டு வெளியான சுந்தர் சி – விஷாலின் மதகஜ ராஜா திரைப்படம் 6 ஆம் இடத்தில் உள்ளது.
குடும்பங்களைக் கவர்ந்த விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிப்பில் வெளிவந்த தலைவன் தலைவி படம் வசூலில் 5 ஆம் இடத்தை பிடித்திருக்கிறது.
இந்திய அளவில் சூப்பர் ஹிட்டான காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 110 கோடி ரூபாய் வசூலைப் பெற்று 4 ஆம் இடத்தில் உள்ளது.
அஜித்தின் விடா முயற்சி மற்றும் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் ஆகிய படங்கள் நல்ல வசூலை அள்ளிக் குவித்து 3 ஆம் இடத்தில் இருக்கின்றன.
குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.175 கோடி வரை வசூலித்ததாக சொல்லப்படுகிறது. இந்த படம் அதிக வசூலில் 2 ஆம் இடத்தில் உள்ளது.
ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவந்த கூலி திரைப்படம் கலவை விமர்சனங்களைப் பெற்றாலும் அதிக வசூல் செய்த படங்களில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
பகிரவும்...
