தங்காலையில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி
தங்காலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
தங்காலை – உணாகூருவ வாவிக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 68 வயதுடைய நபர் ஒருவரும், 59 வயதுடைய அவரது மனைவியுமே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
துப்பாக்கிதாரிகள் 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பகிரவும்...