Main Menu

இலங்கை கடற்படையினர் மீது குற்றம் சுமத்தும் எடப்பாடி பழனிசாமி

இலங்கை கடற்படையினரால், தமிழக கடற்றொழிலாளர்கள், மனிதாபிமானமற்ற முறையில் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளதாக, அண்ணா திராவிட முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சுமத்தியுள்ளார்.
தனது எக்ஸ் பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர், மீன்பிடிக்கச் செல்லும், தமிழக கடற்றொழிலாளர்கள், நடுக்கடலில் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
தாம் திசை மாறி வந்ததை தமிழக கடற்றொழிலாளர்கள் எடுத்துக்கூறியும், அதனை பொருட்படுத்தாத இலங்கை கடற்படையினர், அவர்களை சட்டவிரோதமாக கைதுசெய்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சுமதத்தியுள்ளார்.
பகிரவும்...
0Shares