Main Menu

ஓரினச்சேர்க்கை சர்ச்சை: 6 மாதக் குழந்தை மரணத்தில் மர்மம் – தாயின் மீது விசாரணை உத்தரவு

ஓரினச்சேர்க்கை பிரச்சினையில் 6 மாத குழந்தையைத் தாய் ஒருவர் கொலை செய்த சம்பவம் ஓசூரில் பதிவாகியுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பாக ஆண் குழந்தை ஒன்று தாய்ப்பால் குடிக்கும் போது மூச்சு திணறி இறந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
குழந்தையின் தந்தைக்கு அவரது மனைவியின் நடவடிக்கைகளில் சந்தேகம் எழுந்துள்ளது.
இதன்போது மனைவியின் தொலைபேசியை சோதனை செய்த போது தவறான காணொளிகள், புகைப்படங்கள் இருப்பதைக் கணவர் கண்டறிந்துள்ளார்.
மேலும் அவரது மனைவி ஓரினச்சேர்க்கையில் தவறாக நடந்துள்ளதும் தெரியவந்தது.
இதை அடுத்து குழந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் காவல் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.
இந்நிலையில் குழந்தையின் உடலை நாளை தோண்டி எடுத்து விசாரணை நடத்த காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
பகிரவும்...
0Shares