Main Menu

கேரளாவில் அமீபா தொற்றினால் நாளுக்குநாள் பறிபோகும் உயிர்கள்

கேரளாவில் கடந்த 5 நாட்களில் 4 பேர் மூளையை உண்ணும் அமீபா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆண்டில் இதுவரை , கேரளாவில் 160 பேர் பாதிக்கப்பட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் 37 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமீபா, மூக்கு வழியாக உடலுக்குள் நுழைகிறது, பொதுவாக மக்கள் மாசுபட்ட குளங்கள், ஏரிகள் அல்லது குளோரின் சேர்க்கப்படாத குளங்களில் நீந்தும்போது அல்லது குளிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பகிரவும்...
0Shares