இலங்கை சுங்க வருமானம் 2 டிரில்லியனைத் தாண்டியது
இலங்கை சுங்கத்தால் இந்தாண்டு வசூலித்த வரி வருவாய் நேற்றைய (30) நிலவரப்படி 2 டிரில்லியன் ரூபாயை தாண்டியுள்ளது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டிற்கான 2.115 டிரில்லியன் ரூபாய் வருவாய் இலக்கை இலங்கை சுங்கம் வெற்றிகரமாக நெருங்கி வருகிறது.
வரலாற்றில் அரசாங்க வரி வருவாயை வசூலிக்கும் திணைக்களம் ஒன்றால் ஒரே ஆண்டில் சேகரிக்கப்பட்ட அதிகபட்ச வருவாயாக சுங்கம் இந்த சாதனை வருவாயை படைத்துள்ளது.
இந்த வருவாயில் மோட்டார் வாகனங்களிலிருந்து வசூலிக்கப்பட்ட 630 பில்லியன் ரூபாய் அடங்கும்.
ஆண்டு இறுதிக்குள் வருவாய் இலக்கை விட கூடுதலாக 300 பில்லியன் ரூபாய் வசூலிக்க முடியும் என்று சுங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
பகிரவும்...