Main Menu

கரீபியன் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய மெலிசா

கரீபியன் முழுவதும் மெலிசா சூறாவளி தனது பேரழிவைத் தொடர்ந்து ஏற்படுத்தியுள்ளது.

இது வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளை அழித்தது, சுற்றுப்புறங்களை வெள்ளத்தில் மூழ்கடித்தது மற்றும் நூற்றுக்கணக்கான மக்களை வெளியேற்றியது.

ஐந்தாவது வகை சூறாவளியால் தீவு நாடு நேரடியாக குறிவைக்கப்பட்ட பின்னர், புதன்கிழமை (29) ஜமைக்காவில் தாக்கம் தெளிவாகத் தெரிந்தது.

இது பிராந்தியத்தில் இதுவரை அளவிடப்பட்ட மிக சக்திவாய்ந்த சூறாவளிகளில் ஒன்றாகும்.

அங்கு குறைந்தது ஐந்து பேர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹெயிட்டியில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 20 பேர் இறந்தனர், தற்போது இரண்டாம் வகை புயலாக இருக்கும் மெலிசா புயல் அந்தப் பகுதியைக் உருகுலைத்துள்ளது.

ஜமைக்காவில், மக்கள் கூரைகள் கிளித்து ஏறியப்பட்ட வீடுகளில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

அங்கு மின்சாரம் இல்லாமல் தீவு நாடு முழுவதும் பேரழிவனை சந்தித்துள்ளதாக பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் குறிப்பிட்டார்.

மருத்துவமனைகள், நூலகங்கள், காவல் நிலையங்கள், துறைமுக வீடுகள் மற்றும் பிற நகர்ப்புற உள்கட்டமைப்புகளுடன் “80-90% கூரைகள் அழிக்கப்பட்டன என்று அவர் மேலும் கூறினார்.

ஜமைக்காவின் அரச தலைவரான மன்னர் சார்லஸ், ஜமைக்காவிலும் கரீபியன் முழுவதும் மெலிசாவால் ஏற்பட்ட சேதத்தில் “ஆழ்ந்த கவலை” மற்றும் “மிகவும் வருத்தம்” அடைந்துள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

புயல் மண் சரிவுகளையும் ஏற்படுத்திய ஜமைக்காவில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

பின்னர், மெலிசா வடக்கே கியூபாவிற்கு மூன்றாம் வகை புயலாக நகர்ந்து, மணிக்கு 115 மைல் வேகத்தில் காற்று மற்றும் பலத்த மழையைக் கொண்டு வந்து, தீவின் தென்கிழக்கைத் தாக்கியது.

புதன்கிழமை இரவு, புயல் மத்திய பஹாமாஸிலிருந்து 105 மைல் (170 கிமீ) தொலைவில் இருந்தது, மேலும் இரவு முழுவதும் பஹாமாஸ் பகுதியை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மெலிசா சூறாவளி மணிக்கு 100 மைல் (155 கிமீ/மணி) வேகத்தில் காற்றுடன் வடகிழக்கு நோக்கி நகர்ந்தது.

அது பெர்முடாவை நோக்கி மேலும் வடக்கு நோக்கி நகரும் முன் அங்கு ஆபத்தான புயல் அலை எதிர்பார்க்கப்படுகிறது.

டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளுக்கு வெப்பமண்டல புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

மேலும் மெதுவாக நகரும் சூறாவளியின் வேகம் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜமைக்காவில், மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் இறந்தது உறுதி செய்யப்பட்டது.

நாட்டின் முக்கால்வாசிப் பகுதி ஒரே இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மெலிசா வட அமெரிக்காவில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை, ஆனால் வெள்ளிக்கிழமை இரவு கனடாவின் நியூஃபவுண்ட்லேண்டில் உள்ள செயிண்ட் ஜான்ஸை நெருங்கும்போது அது இன்னும் ஒரு வலிமையான வெப்பமண்டல சூறாவளியாக இருக்கும்.

சூறாவளியின் பின்னர் தேவையின் அளவை மதிப்பிடுவதற்காக அமெரிக்கா ஜமைக்காவிற்கு ஒரு பேரிடர் மீட்புக் குழுவை அனுப்புவதாக கூறியுள்ளது.

பகிரவும்...
0Shares