செயற்கை மழைக்கான டெல்லியின் மேக விதைப்பு சோதனை தோல்வி
டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்கும் விலையுயர்ந்த முயற்சி செவ்வாய்க்கிழமை (28) தோல்வியடைந்தது.
அதே நேரத்தில் மேலும் பல சோதனைகள் நடந்து வருவதாக காற்றின் தரம் மிகவும் மோசமாக இருந்த நிலையில், புகைமூட்டம் நிறைந்த நகரத்தில் மேக விதைப்பு சோதனையை மேற்கொண்ட பின்னர் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான அரசாங்கம், தெரிவித்துள்ளது.
டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்கும் முயற்சிக்கு 1 கோடி இந்திய ரூபாவுக்கு மேல் செலவானதாகக் கூறப்படுகிறது.
கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தினால் இயக்கப்படும் ஒரு சிறிய, ஒற்றை-இயக்கி விமானம் செவ்வாயன்று வடமேற்கு டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் சில பகுதிகளில் பறந்து, மழையை பொழிய வைக்கும் இரண்டு சோதனையை நடத்தியது.
இருந்தாலும் மழை பொழியவில்லை.
டில்லியில் காற்று மாசு மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது.
இதனால் குழந்தைகள், முதியோர் மற்றும் நோயாளிகள் நுரையீரல் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த சமயத்தில் காற்றின் தரத்தை மேம்படுத்த செயற்கை மழையை ஏற்படுத்த டில்லி அமைச்சரவை முடிவு செய்தது.
அதன் ஒரு பகுதியாக மே 7 அன்று டெல்லி அமைச்சரவை மேக விதைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
ஐந்து சோதனைகளுக்கு ₹3.21 கோடி ஒதுக்கியது – ஒரு முயற்சிக்கு சுமார் ₹64 லட்சம்.
கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்துடன் இணைந்து திட்டமிடப்பட்ட இந்த சோதனைகள் ஆரம்பத்தில் மே மாத இறுதியில் மற்றும் ஜூன் தொடக்கத்தில் திட்டமிடப்பட்டன.
ஆனால் இரண்டு ஒத்திவைப்புகளை எதிர்கொண்டன:
இந்த செவ்வாயன்று நடத்தப்பட்ட இரண்டு சோதனைகளுக்கும் மொத்தம் தோராயமாக ₹1.28 கோடி செலவாகியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேக விதைப்பு என்றால் என்ன?
மேக விதைப்பு (Cloud Seeding) என்பது — மழை பெய்யும் அளவை அதிகரிக்க செயற்கையாக மேகங்களில் வேதியியல் பொருட்களைப் பயன்படுத்தும் ஒரு வானிலை மாற்றுதல் தொழில்நுட்பம் ஆகும்.
இதில் பொதுவாக வெள்ளி அயோடைடு (Silver Iodide), சோடியம் குளோரைடு (உப்பு), அல்லது டிரை ஐஸ் (Dry Ice – கார்பன் டைஆக்சைடு உறைவு வடிவம்) போன்ற பொருட்கள் விமானங்கள் அல்லது ராக்கெட் மூலம் மேகங்களுக்குள் விடப்படுகின்றன.
இவ்வித பொருட்கள் மேகங்களுக்குள் உள்ள நீராவியை துகள்களாக ஒட்டச் செய்து, மழைத்துளிகள் உருவாக வழி செய்கின்றன. அதன் விளைவாக மழை பெய்யும் வாய்ப்பு அதிகரிக்கும்.

