ஐ.நா சபையை கடுமையாக விமர்சித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
ஐக்கிய நாடுகள் தற்போது சரியாக செயல்படுவதில்லை என்றும் அதன் விவாதங்கள் ஒருபக்க சார்புடையதாக மாறியுள்ளன, எனவும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
டில்லியில் வெளியுறவு அமைச்சக வளாகத்தில், நேற்று இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் 80வது ஆண்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது, ஐக்கிய நாடுகள் சபை தற்போது சரியாக செயல்படவில்லை எனவும் அதன் முடிவெடுக்கும் நடைமுறை, அதன் உறுப்பு நாடுகளின் எண்ணங்களையும், தேவைகளையும் பிரதிபலிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதன் விவாதங்கள் பெரும்பாலும் ஒருபக்க சார்புடையதாக மாறிவிட்டன எனவும் அதன் செயல்பாடு முடங்கி உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சீர்திருத்தம் செய்ய முயன்றால், அதையே தடுக்கின்றனர் எனவும் தற்போது நிதி நெருக்கடியும் ஐக்கிய நாடுகளுக்கு ஒரு கூடுதல் பிரச்னையாக உருவாகியுள்ளது எனவும் ஐக்கிய நாடுகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று பயங்கரவாதம் எனவும் பஹல்காம் போன்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்ற அமைப்பை, ஒரு பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் நாடு வெளிப்படையாகப் பாதுகாக்கிறது எனவும் இந்நிலையில், ஐக்கிய நாடுகள் எவ்வாறு பல நாடுகளின் உறவின் நம்பகத்தன்மையை காப்பாற்றும எனவும் அவர் இதன்போது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வி எழுப்பினார்.
பகிரவும்...