Main Menu

நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களை வரவேற்கத் தயார் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவில் இருக்கும் மக்கள் மீண்டும் தாயகம் திரும்பினால் அரசாங்கம் வரவேற்கத் தயாராகவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் நடைபெறும் நிகழ்வொன்றுக்காக தமிழ்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதி அமைச்சர், அங்கு ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,

இலங்கை அரசு பொருளாதாரத்தில் சிக்கலான சூழலில் இருந்த போது இந்தியா பல்வேறு உதவிகளை செய்துள்ளது.

மலையக தமிழர்களுக்கு இந்தியா சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

புதிய ஜனாதிபதி பதவியேற்றதும் இலங்கை வந்த இந்திய பிரதமர் பல்வேறு நிதி உதவிகள் உள்ளிட்ட உதவிகளை  தொடர்ந்து செய்து வருகிறார்.

தற்போது பொருளாதார சிக்கலில் இருந்து இலங்கை வேகமாக மீண்டு வருகிறது.

நாட்டில் இலஞ்சம் முழுவதும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு பிரதிநிதிகளின் செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டு வீண் விரையம் தவிர்க்கப்பட்டுள்ளது.

அரசியல் தலைவர்கள் சாதாரண மக்களை போல் செயல்படுகின்றனர்.

இலங்கையில் இருந்த இரட்டை சட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கடந்த கால ஆட்சியாளர்கள் ரணில் விக்ரமசிங்க போன்றவர்கள்  தவறு செய்ததால் அவர்களை சிறையில் அடைக்கப்பட்டதன் பின் அனைவருக்கும் நீதி சமம் என்பதை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

தற்போதய  ஒதுக்கீட்டில் வடமாகாணத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, அங்கு ஏராளமான பணிகள் நடந்து வருகிறது, சர்வதேச விளையாட்டு மையம் யாழ்ப்பாணம் பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது.

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சனையை ஒதுக்கி வைத்து மீன்வளம் கடல் வளம் குறித்து அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மீன்வளத்தை பாதிக்கும் வகையிலான திட்டங்களை தடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியா – இலங்கை என இரு நாடுகளும் அரசியல் ரீதியாக ஒற்றுமையாக உள்ளது.

இரண்டு நாட்டு அரசும் மீனவர் பிரச்சனையை பேசி முடிக்க நடவடிக்கைகள் எடுக்க இருக்கிறோம்.

இந்திய இலங்கை மீனவர்கள் இடையேயான பிரச்சனை

சகோதரர்களுக்குள் இருக்கும் பிரச்சனை தான் உள்ளது. பேசி சுமுகமான முடிவை எட்ட முடியும்.

இலங்கை – இந்தியா என இருநாட்டு மக்கள் உறவுகாரர்கள். ஏன் மீனவர் பிரச்சனையை மட்டும்  வைத்து பகைமை உண்டாக்க வேண்டும்.

இலங்கை அனைத்து நாடுகளுடனும் நட்புடன் உள்ளது.

இலங்கையை சீனா ஆக்கிரமித்துள்ளதாக சொல்வது அனைத்தும் பொய்

சுயாதீனமான நாடாக இலங்கை உள்ளது.

மற்ற அனைத்து நாடுகளும் முதலீடுகளும் உதவிகளையும் செய்வதை வைத்து அந்த நாடுகள் இலங்கையை ஆக்கிரமிப்பு செய்துள்ளது என சொல்லக்கூடாது.

இலங்கை அகதிகளுக்கு இந்திய மற்றும் தமிழக அரசு பெரு உதவிகள் செய்து வருகிறது.

இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவில் இருக்கும் மக்கள் மீண்டும் தாயகம் திரும்பினால் இலங்கை அரசாங்கம் வரவேற்கத் தயாராக உள்ளது.

இலங்கை மக்களின் கோரிக்கை குறித்து இரு நாட்டு அரசும் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

பகிரவும்...
0Shares