டெல்லியில் தற்கொலை தாக்குதலுக்கு திட்டமிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் செயற் பாட்டாளர்கள் கைது
தேசிய தலைநகரில் தற்கொலைத் தாக்குதலுக்கு திட்டமிட்டதாகக் கூறப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவின் இரண்டு செயற்பாட்டாளர்களை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு இன்று (24) கைது செய்துள்ளது.
டெல்லி மற்றும் மத்தியப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சோதனைகளைத் தொடர்ந்து இந்த கைதுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களில் ஒருவர் தெற்கு டெல்லியில் கைது செய்யப்பட்டார், இரண்டாவது நபர் மத்தியப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், அவர்கள் தற்கொலைத் தாக்குதலுக்கு பயிற்சிப் பெற்று வந்ததாகவும், அவர்களிடம் ஒரு மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு சாதனம் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அவர்கள் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ISIS உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் பல புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் இப்போது கூட்டாக விசாரணை நடத்தி வருகின்றன.
பகிரவும்...