Main Menu

மோடி-ட்ரம்ப் சந்திப்பு இல்லை; ஆசியன் உச்சி மாநாட்டில் மெய்நிகர் முறையில் கலந்து கொள்ளும் இந்தியப் பிரதமர்

இந்த வார இறுதியில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டிற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கோலாலம்பூருக்குச் செல்ல மாட்டார் என்றும், அவர் அதில் மெய்நிகர் மூலமாக கலந்துகொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான சந்திப்பு குறித்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

ஒக்டோபர் 26 முதல் 28 வரை நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த வாய்ப்புள்ளது என்று PTI செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மலேசியா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கான தனது வரவிருக்கும் இராஜதந்திர பயணத்தை புதன்கிழமை (22) அறிவித்தார்.

இது தென் கொரியாவில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான ஒரு குறிப்பிடத்தக்க சந்திப்பை எடுத்துக்காட்டுகிறது.

பகிரவும்...
0Shares