மித்தெனிய சம்பவம் – பியல் மனம்பேரியின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

மித்தெனிய சம்பவம் தொடர்பில் கைதான பியல் மனம்பேரியும் மின்சார சபை ஊழியர் ஒருவரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி, எதிர்வரும் 29ஆம் திகதி வரை இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மித்தெனிய பகுதியில் ஐஸ் என்ற போதைப் பொருளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் இரசாயனங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் பியல் மனம்பேரி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...