Main Menu

“இலங்கையர் தினம்” என்ற தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

“இலங்கையர் தினம்” என்ற தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை டிசம்பர் 12 முதல் 14 ஆம் திகதி வரை கொழும்பு மாநகரசபை மைதானம், விஹாரமகாதேவி பூங்காவை அண்டிய வளாகங்கள் மற்றும் பிரதான வீதிகளை உள்ளடக்கியதாக 04 வலயங்களில் நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து இனங்கள் மற்றும் மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அனைத்து மாவட்டங்களின் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் உணவுக் கலாசாரங்களை உள்ளடக்கிய நிகழ்ச்சிகள், உள்நாட்டு கைத்தொழில் கண்காட்சி மற்றும் விற்பனை, புதிய உற்பத்திகளுக்கான வாய்ப்புக்களை அறிமுகப்படுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, ‘இலங்கையர் தினம்’ நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகப் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பகிரவும்...
0Shares