Main Menu

துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்காகி வெலிகம பிரதேச சபை தலைவர் உயிரிழப்பு

துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்காகி காயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர எனப்படும் ‘மிதிகம லாசா’ சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அடையாளந்தெரியாதவர்கள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் வெலிகம பிரதேச சபையின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான லசந்த விக்ரமசேகர காயமடைந்து உயிரிழந்துள்ளார்

மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் இன்று அதிகாலை அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

இதன்போது பலத்த காயமமைந்த அவர் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிரவும்...
0Shares