றுகுணு பல்கலைக்கழகத்தின் விவசாய விஞ்ஞான பீட மாணவ குழுக்களிடையே மோதல்

றுகுணு பல்கலைக்கழகத்தின் விவசாய விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவ குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
நிலைமையைக் கட்டுப்படுத்துமுகமாக இரண்டாம் ஆண்டு மாணவர்களை சம்பந்தப்பட்ட வளாகத்திலிருந்து தற்காலிகமாக வெளியேற்ற நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் ஓட்ட எண்ணிக்கை தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக மோதல் ஏற்பட்டு பின்னர் சமரசம் செய்து வைக்கப்பட்டது.
இருப்பினும், திங்கட்கிழமை (20) இன்றும், சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது, இதன் விளைவாக சுமார் 6 மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோதலில் ஈடுபட்ட 21 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு கம்புறுபிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பகிரவும்...