Main Menu

8 மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

8 மாவட்டங்களுக்கு இன்று இரவு 9.00 மணி வரை அமுலாகும் வகையில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களில் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டு கட்டங்களின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் யட்டிநுவர மற்றும் உடுதும்பர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் கேகாலை மாவட்டத்தில் மாவனெல்லை, யட்டியந்தோட்டை, கேகாலை, அரநாயக்க மற்றும் திஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதேவேளை, பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல, பசறை, கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்க, காலி மாவட்டத்தில் நாகொட, நெலுவ மற்றும் எல்பிட்டிய, கண்டி மாவட்டத்தில் உடுநுவர, தெல்தோட்டை, உடபலாத, தொலுவ, பஹததும்பர பஹத்தஹேவாஹெட்ட மற்றும் கங்க இஹலகோரல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் முதல் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கேகாலை மாவட்டத்தில் புலத்கொஹுபிட்டிய, கலிகமுவ, ருவன்வெல்ல, வரகாபொல மற்றும் ரம்புக்கன, குருநாகல் மாவட்டத்தில் நாரம்மல, அலவ்வ, ரிதிகம மற்றும் மல்லவப்பிட்டிய, மாத்தளை மாவட்டத்தில் யடவத்த, உக்குவெல, பல்லேபொல, லக்கல, நாவுல, அம்பன்கங்ககோரயலய மற்றும் ரத்தோட்டை ஆகிய பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, அம்பகமுவ, நோர்வூட் மற்றும் ஹங்குரன்கெத்த மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் கலவானை, இம்புல்பே, இரத்தினபுரி மற்றும் எஹலியகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இன்று இரவு 9.00 மணி வரை அமுலாகும் வகையில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பகிரவும்...
0Shares