பெற்றோரை புறக்கணிக்கும் அரசு ஊழியருக்கு சம்பளத்தில் ஒரு பகுதி குறைப்பு: தெலுங்கானாவில் புதிய சட்டம்

பெற்றோரை புறக்கணிக்கும் அரசு ஊழியர்களுக்கு, அவர்களது சம்பளத்தில் ஒரு பகுதியை குறைக்க தெலுங்கானா அரசு தீர்மானித்துள்ளது.
தெலுங்கானாவில், அரசு பணிக்கு,தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன கடிதம் வழங்கும் நிகழ்வு ஹைதராபாதில் நேற்று நடைபெற்ற நிலையில் அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே முதல்வர் ரேவந்த் ரெட்டி இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரச்னைகளுடன் வரும் பொதுமக்களிடம் அரசு ஊழியர்கள் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் பெற்றோரை அரசு ஊழியர்கள் புறக்கணித்தால், அவர்களது சம்பளத்தில், 10 முதல் 15 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் இவ்வாறு பெறப்பட்ட தொகையை, ஊழியர்களின் பெற்றோர் வங்கி கணக்கில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஊழியர்கள் சம்பளம் பெறுவது போல் உங்கள் பெற்றோரும் மாத சம்பளம் பெறுவது, இதன் மூலம் உறுதி செய்யப்படும் எனவும் இது தொடர்பாக புதிய சட்டத்தை கொண்டு வர மாநில அரசு முடிவு செய்துள்ளத எனவும் தெரிவித்துள்ளார்.
பகிரவும்...