Main Menu

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மோதல் ஆரம்பம் – டில்லி மீது இஸ்லாமபாத் குற்றச்சாட்டு

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் விமானக் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது. பதிலுக்கு ஆப்கானிஸ்தானும் பாக்கிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது என்றும் இருதரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் கூறுகின்றன. 

அதேவேளை இந்தியா மீது பாகிஸ்தான் அரசு குற்றம் சுமத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை இந்தியா தூண்டிவிடுவதாகவும், இதனாலேயே ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதாகவும் பாகிஸ்தான் குற்றம் சுமத்தியுள்ளது.

பாகிஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிர், அணுசக்தி மயமாக்கப்பட்ட சூழலில் போருக்கு இடமில்லை. எனினும், எந்தவொரு தாக்குதல் நடவடிக்கைக்கும் தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இத் தாலிபான்கள் (TTP) அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வந்த நிலையில், கடந்த வாரம் காபூலில் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

தொடர்ந்து மூன்று நாட்கள் இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை இரு நாடுகளும் மிகைப்படுத்தியுள்ளன.

இதேவேளை இத் தாக்குதலை கண்டித்துள்ள இந்தியா உனடியாக மோதல் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறறுத்தியுள்ளது.

அதேநேரம், பாகிஸ்தான் இராணுவத் தளபதி இந்தியாவை நோக்கி அணு ஆயுத மிரட்டல் விடுத்து பேசியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும்...
0Shares