Main Menu

செவ்வந்திக்கு தங்குமிட வசதிகளை வழங்கிய பெண்ணுக்கு விளக்கமறியல்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு தங்குமிட வசதிகளை வழங்கிய பெண் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மதுகமவைச் சேர்ந்த குறித்த பெண்ணை எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது.

அந்த பெண் நீதிமன்றத்தின் சட்ட வைத்திய அதிகாரி முன் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மதுகம – வெலிபென்னவைச் சேர்ந்த வீட்டின் உரிமையாளரான 52 வயதுடைய அவர் இஷாரா செவ்வந்திக்கு தங்குமிட வசதிகளை வழங்கியுள்ளதாக தெரியவந்த நிலையில் அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

பகிரவும்...
0Shares