Main Menu

விடுமுறைக்காக நுவரெலியா சென்ற 18 பேர் போதைப் பொருட்களுடன் கைது

விடுமுறைக்காக பல்வேறு போதைப்பொருட்களுடன் நுவரெலியாவிற்கு வந்த 18 பேர் சந்தேகத்தின் பேரில் நேற்று (18) கைதுசெய்யப்பட்டதாக நுவரெலியா தலைமையக பொலிஸ் தலைமை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் தெமட்டகொட, கம்பஹா, கொழும்பு உள்ளிட்ட இலங்கையில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 18முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட குஷ், ஹெரோயின், ஐஸ், போதைப்பொருள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நுவரெலியா பொலிஸ் மோப்ப நாய் பிரிவின் உதவியுடன், நுவரெலியாவிற்கு உள் நுளையும் அனைத்து பிரதான வீதிகளை உள்ளடக்கிய பொலிஸ் சோதனை பாதைத் தடைகளைப் பயன்படுத்தி சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக நுவரெலியா தலைமையக பொலிஸ் தலைமை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்படவுள்ளதுடன் மேலதிக விசரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

பகிரவும்...
0Shares