Main Menu

1.8 மில்லியனை கடந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை

2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகைதந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.8 மில்லியனை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

புள்ளிவிவரங்களின்படி, இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 75 ஆயிரத்து 657 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த ஆண்டில் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18 லட்சத்து 1,151 ஆக அதிகரித்துள்ளது.

அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் இந்தியாவில் இருந்து வருகைதந்துள்ளதுடன் குறித்த காலப்பகுதியில் சுமார் 4 லட்சம் இந்திய சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகதந்துள்ளனர்.

இதுவரை 3 லட்சத்து 96ஆயிரத்து 274 இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரான்ஸில் இருந்து 90 ஆயிரத்து 250 பேரும் , அவுஸ்திரேலியாவில் இருந்து 81 ஆயிரத்து 040 பேரும் நெதர்லாந்தில் இருந்து 53 ஆயிரத்து 922 பேரும் அமெரிக்காவில் இருந்து 50 ஆயிரத்து 027 பேரும் இந்த ஆண்டு இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை இத்தாலியில் இருந்து 39ஆயிரத்து 932 பேரும் , கனடாவில் இருந்து 37ஆயிரத்தது 606 பேரும் ஸ்பெயினில் இருந்து 36ஆயிரத்து 430 பேரும் மற்றும் போலந்தில் இருந்து 36ஆயிரத்து 389 பேரும், இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

கடந்த ஆண்டு, இரண்டு மில்லியனுக்கும் அதிகமான (2,053,465) சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கைக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இறுதியாக 2018 ஆம் ஆண்டில் வருகைதந்திருந்தனர்.

குறித்த ஆண்டில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான (2,333,796) சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.

இலங்கையின் வருடாந்திர சுற்றுலாப் பயணிகளின் வருகை நான்கு சந்தர்ப்பங்களில் இரண்டு மில்லியனைத் கடந்துள்ளதுடன் 2016, 2017, 2018 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகைந்துள்ளனர் .

பகிரவும்...
0Shares